Politics
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாகியுள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியலில் நீடிக்க ஆதாரை ஆவணமாக ஏற்றுக்கொள்ளமுடியாது என தேர்தல் ஆணையம் கூறியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையை பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு பட்டியல் திருத்தத்துக்கான 12 வது ஆவணமாக பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு படி, ஆதார் அட்டையை ஆவணமாக பெற வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் இன்றே உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரம் ஆதாரை குடியுரிமை ஆவணமாக கருத முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!