Politics
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
சென்னை இராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது,
இன்று மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாளை தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். புதுடெல்லியிருந்து கேப்டன் பிரவீன் தாவர் வந்துள்ளார் அவரைப் பற்றிய வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை உரையாற்ற வந்துள்ளார் , மற்றும் முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் அவர்களின் 5 ஆம் நினைவு நாள் தொடர்ந்து அவருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளோம்.
தோழர் நல்லகண்ணு அவர்கள் நலம் பெறுவதற்கு காங்கிரஸ் பேரியக்கம் சார்பில் கூட்டு பிரார்த்தனை செய்ய உள்ளோம். தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் பிரார்த்தனைகள் அவரை மீண்டும் கொண்டுவரும். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். அவரை மீண்டும் வந்து குரலற்றவர்களின் குரலாக வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சமூக மாற்றத்திற்காக செயல்படும் இயக்கங்கள் தொடர்பாக யாரும் விமர்சனங்கள் வைக்க மாட்டார்கள். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற இயக்கங்கள் சமூக மாற்ற கட்சிகள். ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கத்தை எப்படி சமூக மாற்றத்திற்கான கட்சி என்று கூற முடியும்?
மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றப்பத்திரிகையை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும் ராணுவத்தில் இருக்கும் கேப்டனை மூளை சலவை செய்து ஒரு வெடிகுண்டு குற்றத்தில் ஈடுபட செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.
மகாத்மா காந்தி அடிகளை ஆர்.எஸ்.எஸ். சுட்டுக்கொன்றது. விஞ்ஞானத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். பேசி வருகிறது. புஷ்பராக விமானத்தை ரைட்ஸ் சகோதரர்கள் விமானம் கண்டுபிடிப்பதற்கு முன்பாக வானத்தில் ஏவப்பட்டது என்று கூறுகிறார்கள். கோமியம் குடியுங்கள், அனுமான் தான் விண்வெளியில் சென்ற முதல் நபர் என்று கூறுகிறார்கள். இவைதான் சமூக மாற்றங்களா?
பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் இந்த உலகத்தில் இருக்கிறது என்றால், அது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான்.
வாக்காளர்கள் அளிக்கும் வாக்குகள் அந்த கட்சிகளுக்கு சென்றால் மட்டுமே தான் ஜெயிக்க முடியும். அப்படி இல்லாத நிலையில், வாக்குகள் திருடப்படுவதால் அமைச்சர் அவர்கள் தைரியமாக 50 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருக்கும் என்று கூறுகிறார். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அந்த வாக்குகள் கட்சிகளுக்கு சென்றடையாது. மக்களின் வாக்குகளை அவர்கள் அளித்துக் கொள்வதால் நாங்கள்தான் ஜெயிப்போம் என கூறுகிறார்கள்.
மக்கள் இதனை வேடிக்கை பார்க்க மாட்டார்கள். பீகாரில் மக்கள் திரள் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் 7 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்கு திருட்டு தொடர்பாக விளக்க மாநாடு நடத்த உள்ளோம். அகில இந்திய தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் வாக்கு திருட்டு எப்படி நடைபெற்றது என்பதை விளக்கவுள்ளோம்.
பாஜகவினர் எந்த மாநிலங்களில் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளதோ அந்த மாநிலங்களில் வாக்கு திருட்டு நடத்துகின்றனர். தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மக்கள் புரட்சி வெடிக்கும் என்பதால் வாக்குத்திருட்டை பாஜகு இங்கு செய்வது கடினம்.
வெளியுறவுக் கொள்கைகள் தோல்வியுற்று பல்வேறு வருடங்கள் ஆகியது. அதன் காரணமாக தான் சீனர்கள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். நம்முடைய ராணுவ வீரர்களை கல்லால் அடித்தே கொலை செய்தனர். இந்திரா காந்தி அம்மையார் ஆட்சி காலத்தில் அண்டை நாடுகள் நட்பு நாடுகளாகவும், இந்தியாவுக்கு பயந்தும் இருந்தது. ஆனால் தற்போது அண்டை நாடுகள் அனைவரும் பகை நாடுகளாக மாறிவிட்டது.” என்றார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் அரசு பயிற்சி.. விண்ணப்பிப்பது எப்படி?