Politics
"ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை சரியானது அல்ல" - உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா !
நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும், சட்ட மன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு - ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒன்றிய அரசு திட்டமிட்டது. இது குறித்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க நாடாளுமன்ற கூட்டு குழு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை அழைத்திருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மூலம் ஆணையத்துக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கியுள்ளது சரியானது அல்ல என்று கூறியுள்ளார்.
மேலும், எதிர்பாராத காரணங்களால் நாடாளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடியாவிட்டால் அதனை ஒத்திவைக்க தேர்தல் ஆணையத்துக்கு மசோதா மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அதே போல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏதுவாக ஒரு மாநிலத்தின் தேர்தலை பல மாதங்களுக்கு ஒத்திவைக்கும் பிரிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக குடியரசு தலைவர் ஆட்சிக்கு வழிவகுப்பதாக உள்ளது என்று நீதிபதி சஞ்சீவ் கன்னா கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!