Politics
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், ஜூலை 21 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எழுப்பிய கேள்வியும், கண்டனமும் பின்வருமாறு,
பட்டியலரின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை குறைவாகப் பயன்படுத்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், எஸ்சி துணைத் திட்ட மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ், ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட தொகை மற்றும் நிதி குறைவாகப் பயன்படுத்தப்பட்டதற்கான காரணங்கள், மேலும் எஸ்சி-களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் முதலிய தகவல்களை எம்.பி. ஆ. ராசா கேட்டுள்ளார்.
Also Read
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!
-
வேளாண் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது ? : செல்வப்பெருந்தகை கேள்வி!