அரசியல்

“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!

“கிராமப்புறங்களில் புற்றுநோய் பரிசோதனை மையங்களுக்கான செயல் திட்டம் என்ன?” திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி!

“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளும், கண்டனங்களும் பின்வருமாறு,

“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” திமுக எம்.பி. பி. வில்சன் குற்றச்சாட்டு!

மாம்பழ கூழ் மீதான 12 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதன் உற்பத்தியை மோசமாக பாதித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!

ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் நெடுநாள் கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலிக்காதது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார்.

“கிராமப்புறங்களில் புற்றுநோய் பரிசோதனை மையங்களுக்கான செயல் திட்டம் என்ன?” திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி!

அனைத்து கிராமப்புறங்களிலும் புற்றுநோய் பரிசோதனை மையங்களுக்கான செயல் திட்டத்தின் நிலை குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் செயல்படும் புற்றுநோய் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை என்ன? கிராமப்புறங்களில் புற்றுநோய் பரிசோதனை நடத்துவதில் மருத்துவர்கள், துணை செவிலியர்கள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் (CHOS) உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க அரசின் திட்டம் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories