Politics

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்... இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை அறிவித்தார் மல்லிகார்ஜுன கார்கே !

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் மாநிலங்களவை சபாநாயகராகவும் திகழ்ந்து வந்த நிலையில், அவர் மாநிலங்களவையில் தனது பதவியை மறந்து பாஜக அரசின் பிரதிநிதி போல அவர் செயல்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே உடல்நிலையை காரணம் காட்டி குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து பாதியிலேயே ஓய்வு பெறுவதாக ஜெகதீப் தன்கர் அறிவித்தார். இது அரசியல் தளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால், குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பில், குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். சுதர்சன் ரெட்டிக்கு இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "சிறந்த மனிதரை வேட்பாளராக அறிவித்துள்ளோம். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்தோடு, ஆந்திராவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டி அவர்களை குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளோம்"என்று கூறியுள்ளார்.

Also Read: “இனிமே கூட்டத்துக்குள்ள வந்த...” : அவசரமாக வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டிய பழனிசாமி - குவியும் கண்டனம்!