Politics

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மிரட்டல்... பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை - திமுக IT விங் கண்டனம் !

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாலையில் பொதுக்கூட்டம் போல பொதுமக்களிடம் பேசினார். அப்போது அந்த வழியாக அம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. அதனை பார்த்து கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, "அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார்"என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு திமுக IT விங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தோல்வி மேல் தோல்வி கண்டு அரண்டு போயுள்ள பழனிசாமி, சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சென்றாலும் பொதுமக்கள் மட்டுமல்ல அவரது கட்சிக்காரர்களே புறக்கணித்து செல்கின்றனர்.

இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவதூறுகளையும் வசைகளையும் மட்டுமே பரப்பிவந்த பழனிசாமி, விரக்தியின் உச்சத்துக்கே சென்று, உயிரை காக்கும் ஆம்புலன்ஸ் செல்வதை கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் “இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாக போகிற நிலைமை வரும்” என பேசியிருக்கிறார்.

ஏழை எளிய மக்கள், கர்ப்பிணி பெண்களின் நலனை, வாழ்வை காக்கும் ஆம்புலன்ஸ் மீதும், அதன் ஓட்டுநர்கள் மீதும் பழனிசாமிக்கு அப்படியென்ன காழ்ப்புணர்ச்சி? வயித்தெறிச்சல்?

உயிர்காக்கும் உன்னத சேவையில் இருக்கும் ஆம்புலன்ஸ் பணியாளர்களை பெரும் கூட்டத்தின் முன்னிலையில் அச்சுறுத்துவது என்பது மோசமான நடைமுறை. எடப்பாடியின் பேச்சைக் கேட்டு அதிமுக தொண்டர்கள் வன்முறையில் இறங்கியிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். எதிர்க்கட்சித்தலைவர் முன்னாள் முதலமைச்சர் என்ற பொறுப்புடன் அவர் நடந்து கொள்ள வேண்டும். நாளுக்கு நாள் யாருக்கும் மரியாதை தராமல் தரம் தாழ்ந்து பேசிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை.. இல்லையெனில் மக்களே தகுந்த பதிலை தருவார்கள்!

Also Read: சுதந்திர தினத்தில் புகழாரம்... மோடியை காப்பாற்றுமா ஆர்.எஸ்.எஸ்.? - முரசொலி தலையங்கம்!