Politics
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 18) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளும், கண்டனங்களும் பின்வருமாறு,
“சமமற்ற வரிப் பகிர்வு – தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” என வட சென்னை திமுக எம். பி. கலாநிதி வீராசாமி கேள்வி!
தொடர்ந்து ஒன்றிய அரசு சமத்துவமற்ற வரிப் பகிர்வை மேற்கொள்வதையும் முறையான வரிப்பகிர்வை வலியுறுத்தும் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதையும் சுட்டிகாட்டி நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் கீழ், தமிழ்நாட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட மொத்த நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் மற்றும் மாநிலத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு?
தற்போதைய அதிகாரப் பகிர்வு உயர் செயல்திறன் கொண்ட மாநிலங்களைத் தண்டிப்பதாக இருக்கிறது என்று கூறியிருக்கும் அவர், அத்தகைய நியாயமற்ற கட்டமைப்பை ஏன் தொடரவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
“சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் ப்ரசாத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் பயன்பெறும் இடங்கள் யாவை?” என தர்மபுரி திமுக எம்.பி. அ. மணி கேள்வி
ஆன்மீக இடங்களை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தும் ப்ரசாத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் பயன்கள் குறித்து தர்மபுரி மக்களவை உறுப்பினர் அ. மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சுற்றுலா தங்கும் வசதிகள், சாலை வசதிகள், விளக்குகள், குறியீட்டு அடையாளங்கள், உதவி மையங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்கள் என இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட உள்கட்டமைப்புகளின் விவரங்கள் என்ன? அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்? தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கு பரிசீலனையில் உள்ள, ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் திட்டங்களின் விவரங்கள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க 5 ஆண்டு திட்டம்! : முழு முனைப்பில் தமிழ்நாடு அரசு!