Politics
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாகியுள்ளது. மேலும் நாடு முழுவதும் தேர்தலில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால், முதல் முறையாக ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் கொடுக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதுவரை 25 தலைமை தேர்தல் ஆணையர்கள் பணியாற்றி உள்ள நிலையில், முதல் முறையாக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை இழந்து இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸை எதிர்கொள்ள உள்ளார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.
தற்போதைய தேர்தல் ஆணையர் மீது பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எதிர்கட்சிகள் தொடங்கியுள்ளன. இதுவரை எந்த தலைமை தேர்தல் ஆணையர் மீதும் எதிர்க்கட்சிகள் பதவி நீக்க நோட்டீஸ் கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க 5 ஆண்டு திட்டம்! : முழு முனைப்பில் தமிழ்நாடு அரசு!