Politics
"குடியரசுத் தலைவரின் 14 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம்" - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் !
சட்ட மசோதாக்கள் மீது குறைந்தது ஒரு மாதம் முதல் அதிக பட்சமாக 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து குடியரசு தலைவர் மூலம் ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் தங்களது எழுத்து மூலமான வாதங்களை 15 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு எழுத்து மூலமான வாதங்களை தாக்கல் செய்துள்ளது.
மேலும், ஒன்றிய அரசுமற்றும் சில மாநிலங்கள் சார்பாகவும் எழுத்து மூலமாக வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு அரசு சார்பில், "உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையிலும், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட சட்ட வழிமுறைகளை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் குடியரசு தலைவர் மூலம் எழுப்பி உள்ள கேள்விகளுக்கு விரிவாக பதிலளிக்கப்பட்டுள்ளது. எனவே, குடியரசு தலைவர் மூலம் ஒன்றிய அரசு எழுப்பிய கேள்விகள் நிலை நிற்பது அல்ல என்று அறிவிக்க வேண்டும், 14 கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும்" என்று பதில் மனு தாக்கல் செய்ய்யப்பட்டுள்ளது.
Also Read
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!