Politics

திமுக ஆட்சிக்கு வந்தாலே உயரும் தமிழ்நாட்டின் பொருளாதாரம்... சுட்டிக்காட்டிய ஒன்றிய அரசின் புள்ளிவிவரம் !

தமிழ்நாட்டில் இறுதியாக கலைஞர் ஆட்சிக்காலத்தில் 2011-ம் ஆண்டு தமிழ்நாடு 13.12 சதவீத வளர்ச்சியை எட்டியது. அதன் பின்னர் வந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக சரிந்தது. அதிலும் பழனிசாமியின் ஆட்சியில் இது மோசமான நிலைக்கு சென்றது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி மலர்ந்ததும் தமிழ்நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்தது. கடந்த 2024 - 25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில பொருளாதார வளர்ச்சி 9.69 % என்று ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், அதனை மறுஆய்வு செய்ததில் கடந்த 2024 - 25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 11.19 % என்று திருத்தி ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை மதிப்பிட்டுள்ளது.

அதோடு இந்தியாவிலேயே இரட்டை இலக்கு வளர்ச்சியை பதிவு செய்த ஒரே மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு மீண்டும் இரண்டு இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது ஒரு பெரும் சாதனை நிகழ்வாக பதிவாகியுள்ளது.

Also Read: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தென் மாவட்டங்களில் நிகழும் தொழிற்புரட்சி - முரசொலி பாராட்டு !