Politics
“சிறுபான்மையினரின் கல்வி மேம்பாட்டிற்கு நடவடிக்கை என்ன?” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கேள்வி!
இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 30) நாடாளுமன்றத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
“சிறுபான்மையினரின் கல்வி மேம்பாட்டிற்கு நடவடிக்கை என்ன?” என பொள்ளாச்சி திமுக எம்.பி ஈஸ்வரசாமி கேள்வி!
தமிழ்நாட்டில் சிறுபான்மையினரின் கல்விக்காக எடுக்கப்பட்ட புதிய முயற்சிகளின் விவரங்கள் கேட்டு பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
சிறுபான்மையினரின் முறையான கல்வி வளர்ச்சியிலும் திட்டங்களை செயல்படுத்துவதிலும் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் குறைபாடுகளின் விவரங்கள் என்ன மற்றும் அவற்றைச் சமாளிக்க அரசு எடுத்த/ எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
“தமிழ்நாட்டிற்கு வருமா அமிர்த பாரத்?” என கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. மலையரசன் கேள்வி
அமிர்த பாரத் எனும் மலிவு விலை கட்டணத்தில் ஏசி இல்லாத விரைவு இரயில்களை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ரயில்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து கள்ளக்குறிச்சி திமுக மக்களவை உறுப்பினர் மலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த முயற்சியின் கீழ் அனுமதிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதிகளின் விவரங்கள் என்ன? தமிழ்நாட்டிற்குள் இதுவரை அமிர்த பாரத் ரயில்கள் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ரயில்களின் எண்ணிக்கை என்ன?
அமிர்த பாரத் ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள், குறிப்பாக பயணிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் விவரங்கள் என்ன?
உள்கட்டமைப்பு, ஊழியர்கள் பயிற்சி மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்த ரயில்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்ய அரசாங்கம் எடுத்த/எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?
இந்த ரயில்களை நாடு முழுவதும் விரிவுபடுத்த அரசு முன்மொழிகிறதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
Also Read
-
ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!
-
“த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு என்பது கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பேசவிடு! பேசவிடு! உண்மையை பேசவிடு!” : சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுத்ததால் தி.மு.க வெளிநடப்பு!
-
பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்! - கனிமொழி கண்டனம்!
-
ஒவ்வொரு தொண்டரும் ஒரு நிர்வாகி ; உடன்பிறப்புகள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்றம் : முரசொலி!