Politics
திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்த குடியரசுத் துணைத் தலைவர்... சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் !
ஜனதா கட்சி, காங்கிரஸ் என தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஜெகதீப் தன்கர் கடந்த 2003-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். அங்கு பல்வேறு பதவிகளை வகித்த அவர். கடந்த 2019-ம் ஆண்டு மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அப்போது மாநில அரசுடன் பல்வேறு முரண்பாடுகளை சந்தித்த அவர் பின்னர் குடியரசுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதோடு மாநிலங்களவை சபாநாயகராகவும் அவர் திகழ்ந்து வரும் நிலையில், மாநிலங்களவையில் தனது பதவியை மறந்து பாஜக அரசின் பிரதிநிதி போல அவர் செயல்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே நேற்று இரவு உடல்நிலையை காரணம் காட்டி குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து பாதியிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "குடியரசு துணைத் தலைவர் தன்கரின் திடீர் ராஜினாமா அதிர்ச்சியளிக்கிறது. மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், மாலை 5 மணி வரை நானும் அவருடன் இருந்தேன்.
இரவு 7:30 மணிக்கு தொலைபேசியிலும் பேசினேன். உடல்நலத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது சரி தான். ஆனால் அவர் எதிர்பாராமல் ராஜினாமா செய்ததற்குப் பின்னால் இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது, அது இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது ஊகிக்க வேண்டிய நேரம் அல்ல" என்று கூறியுள்ளார்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!