Politics
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
பாஜக அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், ஆரம்பத்தில் இருந்து அந்த கூட்டணியில் சலசலப்பு தொடர்ந்து கொண்டே உள்ளது. கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் இருந்து கூட்டணி ஆட்சி வரை அந்த கூட்டணியில் மாறி மாறி கருத்துக்கள் வெளியாகி வருகிறது.
இதனிடையே இந்த கூட்டணிக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால், சிறுபான்மை சமூக வாக்குகள் பெரும்பாலும் கிடைக்காது. முதல்வர் தேர்வில் பாஜகவின் திட்டம் பலிக்க்காது. எப்படி முயன்றாலும் பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கூட்டணிக்கு தலைமை தாங்கப் போவது அதிமுக தான். இதனை பாஜக ஏற்கவில்லை என்றால், இரு கட்சிகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு சாத்தியம் இல்லை. தனிமனிதர்களை விடவும் அதிமுக தொண்டர்கள் கட்சியைத் தான் பெரிதாக மதிப்பார்கள்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!