Politics
மத மோதலை தூண்டும் விதமான பேச்சு... மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு- விவரம் உள்ளே!
சென்னை காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, மதுரை ஆதீனம், ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் மதுரையில் இருந்து தனது காரில் சென்னை நோக்கி வந்து இருந்தார்.
வரும் வழியில், உளுந்தூர்பேட்டை அருகே ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது. இதில், எந்த காயமுமின்றி அவர் தப்பிய நிலையில்,சைவ சித்தாந்த மாநாட்டில் கார் விபத்து மூலம் தன்னை கொல்ல சதி நடந்ததாக பேசிய மதுரை ஆதீனம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு தன்னை கொலை செய்ய முயன்றதாகவும் கூறியிருந்தார். எனினும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை, விபத்து தொடர்பான சிசிடிவி ஆதாரத்தையும் வெளியிட்டதில் ஆதினம் பொய் சொன்னது அம்பலமானது.
இந்த நிலையில், மத மோதலை தூண்டும் விதமாக பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்தின் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்திற்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல், பொதுத் தீமைக்கு வழிவகுக்கும் அறிக்கைகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்புதல், உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
NIA வழக்குகளில் தனி நீதிமன்றம் அமைத்து 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு !
-
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த ஒன்றிய பாஜக அரசு - முதலமைச்சர் கண்டனம் !
-
நிர்மலா சீதாராமனுக்கு இது புரியாது, ஏனெனில் அவருக்கு புரிந்துகொள்ளும் தன்மை இல்லை - முரசொலி விமர்சனம் !
-
TNPSC குரூப் 2, 2ஏ-வில் 1270 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு : முழு விவரம் இதோ!
-
மெட்ரோ திட்டத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : DMK IT WING கண்டனம்!