அரசியல்

மதுரை ஆதீனத்தின் அவதூறு கருத்து : CCTV காட்சிகளை வெளியிட்டு அம்பலப்படுத்திய காவல்துறை... விவரம் உள்ளே !

மதுரை ஆதீனத்தின் அவதூறு கருத்து : CCTV காட்சிகளை வெளியிட்டு அம்பலப்படுத்திய காவல்துறை... விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை உளுந்தூர்பேட்டை அருகே தன்னை வாகன விபத்து மூலம் கொல்ல சதி செய்துள்ளதாக மதுரை ஆதீனம் கூறியிருந்தார். இந்த நிலையில், அவரின் கருத்து தவறானது என்பது விபத்து நடந்த CCTV காட்சிகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை விவரம் :

02.05.2025-ம் தேதி காலை மதுரை ஆதீனம் மடாதிபதி அவர்கள்சென்னைக்கு TN 64 U 4005 Fortuner என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா அருகே மற்றொரு காரின் மீது இடித்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திலிருந்து பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் இரு தரப்பினர்களும் சென்றுவிட்டனர்.

சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில் மேற்படி மதுரை ஆதீனத்தின் வாகனம் அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்வதற்கு பதிலாக அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக சேலம் ரவுண்டானா அருகே உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக சேலம் ரவுண்டானா முன்பு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை கடந்து மெதுவாக வந்த Maruthi Suzuki என்ற வாகனத்தின் மீது காலை சுமார் 09.45 மணியளவில் பக்கவாட்டில் உரசியதில் மேற்படி மாருதி வாகனத்தின் முன்பகுதியிலும் Fortuner வாகனத்தின் இடது பின்பக்கத்திலும் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.

மதுரை ஆதீனத்தின் அவதூறு கருத்து : CCTV காட்சிகளை வெளியிட்டு அம்பலப்படுத்திய காவல்துறை... விவரம் உள்ளே !

இரு தரப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு அவர்களாகவே சுமார் 10.00 மணியளவில் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனத்தை கொலை முயற்சி செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மதுரை ஆதீனம் அவர்களே தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக தெரிவித்து வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் அவர்கள் பயணம் செய்த Fortuner வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து எனத் தெரிகிறது. CCTV பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுரை ஆதீனம் அவர்கள் பயணம் செய்த வாகனம் அதிவேகமாக சென்று இவ்விபத்தினை ஏற்படுத்தியதாக தெரியவருகிறது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனமோ அவர்களை சார்ந்தவர்களோ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எவ்வித புகாரும் இதுவரை கொடுக்கவில்லை. பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

banner

Related Stories

Related Stories