Politics
4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்... இந்தியா கூட்டணி கட்சிகளிடம் படுதோல்வியை சந்தித்த பாஜக !
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பல இடங்களில் பாஜக அதிக இடங்களை பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதே நேரம் அந்த மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது.
சமீபத்தில் மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ஏராளமான இடங்களில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் பாஜக தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற்றதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அம்பலப்படுத்தினார். இது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குஜராத், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த கான ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், குஜராத்தில் உள்ள 1 சட்டமன்ற தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றள்ளது. அதே குஜராத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்த நிலையில், பிற மாநிலங்களிலும் பாஜக குறைவான வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
Also Read
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!