Politics
சுற்றுச் சூழலை கெடுப்பதை அனுமதிக்க முடியாது... ஒன்றிய அரசின் இரண்டு அறிவிப்புகளுக்கு உச்சநீதிமன்றம் தடை!
திட்டங்களை தொடங்கிவிட்டது பின்னர் சுற்றுச் சூழல் அனுமதி வழங்கும் வகையில் 2017, மற்றும் 2021 ஆண்டுகளில் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அறிவிப்பு ஆணைகளை வெளியிட்டது. இதன் மூலம் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் பல திட்டங்களுக்கு ஒன்றிய சுற்றுச் சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது.
இதனை எதிர்த்து சுற்றுச்சூழல் அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு ஆணை 1986 ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று கூறியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவர்களை பாதுகாக்க இந்த உத்தரவுகள் வெளியிடப்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், சுற்றுச்சூழலை பணயம் வைத்து வளர்ச்சியை எட்ட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவரை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நடைமுறை அரசியல் சாசன பிரிவு 21க்கு எதிரானது என்று தெரிவித்த உயர்நீதிமன்றம், ஒன்றிய அரசின் இரண்டு அறிவிப்பாணைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பு மதிப்பீடு அறிவிப்பை மீறும் வகையிலான புதிய ஆணைகளை ஒன்றிய அரசு வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்ற தடை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!