Politics
"தவறு நடந்திருந்தால் அந்த தவறை பார்க்க வேண்டும்"-பாஜக முதல்வருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், இந்த வன்முறையின் பின்னணியில் அம்மாநில முதல்வராக இருந்த பிரேன்சிங் இருந்ததாக புகார் எழுந்தது. மேலும் அவருக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களும் வெளியாகின.
அதைத் தொடர்ந்து பிரேன்சிங் மணிப்பூரில் வன்முறையை தூண்டினார், அதற்கான ஆடியோ ஆதாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை கடந்த முறை விசாரித்த உச்ச நீதிமன்றம் குரல் பதிவை ஆய்வு செய்ய தடைய அறிவியல் சோதனைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தடைய அறிவியல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதோடு டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது சீலிடப்பட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை நீதிபதிகள் படித்துப் பார்த்தனர். பின்னர் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை பாதுகாப்பதற்கு பதிலாக, தவறு நடந்திருந்தால் அந்த தவறை பார்க்க வேண்டும்.தடைய அறிவியல் அறிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேசுங்கள். புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர் ஒன்றிய அறைன் கருத்தை தெரிவிக்க கூறி வழக்கை ஜூலை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Also Read
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !