Politics
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை : அனைத்து கட்சிக் கூட்டம் தொடக்கம்.. பங்கேற்றுள்ள 56 கட்சிகள் என்னென்ன?
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, சிபிஎம், சிபிஐ, விசிக, தேமுதிக, பாமக உள்ளிட்ட 56 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், நாம் தமிழர், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் துணைத் தலைவர் கலி பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில், அழைக்கப்பட்ட அங்கீகரிப்பட்ட கட்சிகள் சார்பில் 2 பிரநிதிகளும், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பில் ஒரு பிரநிதியும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில், திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாராதி, மூத்த வழக்கறிஞர் வில்சன்,
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் இன்பதுரை,
காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ் குமார்
விடுதலை சிறுத்தைகள் - விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் பொதுச் செயலாளர் ரவிக்குமார்.
இந்திய கம்யூனிஸ்ட் - மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாநிலச் செயலாளர் சண்முகம், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம்,
மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திருச்சி நாடாளுமன்ற துரை வைகோ
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கவுரவ தலைவர் ஜிகே மணி
தேமுதிக சார்பில் துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி மற்றும் அவைத் தலைவர் இளங்கோவன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன்
- ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே , அனைத்து கட்சிக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தின் தொடக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் அனைத்துக் கட்சிகளும் தொகுதி மறுவரையறை தொடர்பான தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதன் பிறகு அனைத்து கட்சிகளும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இறுதியாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிவார்.
இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சி பிரநிதிகள் குழு டெல்லி சென்று குடியரசு தலைவரை சந்தித்து வலியுறுத்துவது, 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையை செய்ய வேண்டும், இது தொடர்பாக மீண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது, ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!