Politics
தொகுதி மறுவரையறை... “நாடாளுமன்றத்தில் எங்களுடைய அங்கீகாரம் காக்கப்படாது” - கலாநிதி வீராசாமி !
சென்னை திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் கொளத்தூர் கிழக்கு பகுதியில் உள்ள திரு.வி.க. நகர் மற்றும் பெரியார் நகர் பகுதியில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். முன்னதாக கழகக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி இனிப்புகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி பேசியதாவது, “முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி அன்னம் தரும் அமுதகரங்கள் மூலமாக தினமும் ஆயிரம் நபர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார்கள். மேலும் பல நலத்திட்ட உதவிகளும் செய்து வருகிறார்கள்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சரின் முன்னெடுப்பு, தென்னிந்திய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. இதனால் தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தை பாஜக புறகணித்துள்ளது.” என்றார்.
=> தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறக்கூடிய பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காகதான், தொகுதி மறுவரையைறை விவகாரத்தை பேசு பொருளாக மாற்றுகிறார்கள் என தமிழக பாஜக கூறுவது குறித்தான கேள்விக்கு,
தொகுதி மறுவரையறை 1971 வரைக்கும் நடந்துள்ளது. முதல் தேர்லின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 497 என ஆரம்பித்தது. அதற்குப் பிறகு மக்கள் தொகை அதிகமாக, அதற்கேற்றவாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகப்படுத்த வேண்டும் என மூன்று வருடங்களாக நடத்தினார்கள். 1976 ஆம் ஆண்டு அது நிறுத்தப்பட்டது. ஏனென்றால் சில மாநிலங்களில் மக்கள் தொகை பெருகிக்கொண்டிருக்கிறது மற்ற மாநிலங்களில் குறைந்து கொண்டிருக்கிறது.
வடமாநிலங்களான உத்தரபிரதேசத்தில் முதல் தேர்தலின் போது 8 கோடி மக்கள் தொகை, தமிழகத்தில் 4 கோடி மக்கள் தொகை என இருந்தது. அதனால்தான் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆக உள்ளது. தமிழகத்தில் 39 ஆக உள்ளது.
இன்றயை மக்கள் தொகையில் உத்தர பிரதேசம் 20 கோடிக்கும் மேலாக உள்ளது. தமிழகத்தில் 8 கோடியாக தான் மக்கள் தொகையில் இருக்கிறோம். தொகுதி மறுவரையறையின்போது உத்தரபிரதேசத்திற்கு அதிகமான எம்.பி.-க்கள் வருவார்கள். ஆனால் தென்னிந்தியாவில் ஏற்கனவே 24 சதவீதம் எம்.பி.க்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அது தொகுதி மறுவரையறையின்போது 18 சதவீதத்திற்கும் கீழே சென்று விடும்.
வளரும் மாநிலங்கள் எல்லாம் தேய்ந்து கொண்டிருந்தால் எங்களுடைய அங்கீகாரம் காக்கப்படாது. அதனால்தான் 50 ஆண்டுகளாக இந்திரா காந்தி அம்மையார் மற்றும் வாஜ்பாய், 2026 வரைக்கும் என சொல்லி இருந்தார்கள். சூழ்ச்சி நோக்கத்தோடு சென்சஸ் என்பது 2021 இல் நடத்த வேண்டியது அடுத்து 2031 இல் நடக்கும். அப்போ 2026 இல் மாற்ற முடியாது 2029 தேர்தலை மனதில் வைத்து கொண்டு ஒன்றிய அரசு செயல்படுகிறது.
நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இல்லாமல் பாஜக இருந்ததால், கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சியில் உள்ளது. எனவே அடுத்த தேர்தலில் 'உத்திர பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் அதிக எம்.பி.க்களை வைத்துக்கொண்டால் தென்னிந்திய பக்கம் பிரச்சாரம் செய்ய கூட தேவையில்லை; இவர்களை தனியாக விட்டுவிட்டு வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள்'. அதனை முதலமைச்சர் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார்" என்றார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!