Politics
"களத்தில் திமுகவுக்கு எதிரிகளே இல்லை என்ற நிலைதான் இருக்கிறது" - திமுக எம்.பி கனிமொழி !
திமுக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 72 வது பிறந்தநாளையொட்டி மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, "தி.மு.க மேற்கொள்ளும் நகர்வுகளை கண்டு பாஜக அலறுகிறது. தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. இல்லாத எதிரியை மேடையில் அமர வைத்து பேச வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. களத்தில் திமுகவுக்கு எதிரிகளே இல்லை என்ற நிலைதான் இருக்கிறது.
நாங்கள் ஒன்றிய அரசிடம் கேட்பது மாநில உரிமைகள். இந்த இனத்தை மொழியை காப்பதற்கான முன்னெடுப்புகள் திமுக மேற்கொள்கிறது. பாராளுமன்றத்தில் இந்தி தெரியாத எங்களுக்கு அங்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்தி படித்த யாருக்கும் புதிய லாபம் எதுவும் கிடைக்கவில்லை தேவைபடும் போது தனிப்பட்ட முறையில் மொழியை கற்றுகொள்வார்கள். இந்தி சொல்லிக்கொடுக்கவில்லை என்பதற்காக மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க மறுக்கும் போது தான் பிரச்சினை வருகிறது"என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி எம்.பி, "முதல் முறையாக தமிழ்நாட்டின் நலன் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதாக அதிமுக அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சருடைய கோரிக்கையாக உள்ளது.
அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து நமக்கான உரிமைகளுக்கான போராடுவது என்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கது.தமிழ்நாட்டில் பாஜக தவிர எல்லா கட்சிகளும், புதிய கல்விக் கொள்கை தேவையில்லை என்று கூறுகிறார்கள். புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!