Politics

வெளிச்சத்துக்கு வந்த அண்ணாமலை, எடப்பாடி பரப்பிய அவதூறு... பொய்யை அம்பலப்படுத்திய ஒன்றிய அமைச்சர் !

ரயில்வே அமைச்சர் அஸ்வி வைஷ்ணவ் பெரம்பூரில் ICF-ல் சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

உடனே நிலம்/சுற்றுச்சூழல் பிரச்னைகள் காரணமாக மாநில அரசு இந்த திட்டத்தை வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

union minister ashwini vaishnaw

இதனிடையே உண்மை என்ன என்பதை அறிந்துகொள்ள கூட முடியாமல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாடு அரசை கண்டித்ததோடு, போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தனர்.

இந்த நிலையில், அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தில் தமிழ்நாடு அரசின் நிலம் தொடர்பான எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை அமைச்சர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தொழிற்சாலையின் பின்னணி இரைச்சல் காரணமாக அது தனுஷ்கோடி திட்டம் என்று கேட்டு - அதற்கு ஏற்றவாறு ரயில்வே அமைச்சர் பதில் அளித்ததாகவும் கூறியுள்ளார். இதன்மூலம் பாஜக மற்றும் அதிமுகவின் நாடகம் அம்பலமாகியுள்ளது.

Also Read: நேற்று பொங்கல் புறக்கணிப்பு.. இன்று வள்ளுவருக்கு காவி.. ஆளுநர் ரவியின் அழிச்சாட்டியங்கள்-குவியும் கண்டனம்