Politics

பல்கலைக்கழகங்களில் SC, ST மாணவர்கள் மீது சாதி பாகுபாடு : UGC-யிடம் அறிக்கை கேட்ட உச்சநீதிமன்றம் !

நாடு முழுதும் உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST பிரிவு மாணவர்கள் மீது காட்டப்படும் சாதி பாகுபாட்டை தடுக்கவும், அவர்களுக்கு சமமான கல்வி சூழலை உருவாக்க விதிமுறைகளை வகுத்து வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சூரியகாந்த், உஜ்ஜால் பூய்யான் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதார் தரப்பில் ஆஜரான வாக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், 2011 முதல் 2024 வரை ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் 115 தற்கொலைகள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பல்கலைக் கழகங்களில் சாதி பாகுபாட்டை தடுக்க 2012 ஆம் ஆண்டு விதிமுறைகள் இருந்தும் அதனை முறையாக செயல் படுத்துவதில்லை என்றும் அதனை கண்காணிப்பது பல்கலைக்கழக மானிய குழுவின் முதன்மையான பொறுப்பாகும் என்றும் வாதிட்டார்.

அதோடு மொத்தமுள்ள 820 பல்கலைக்கழகங்களில் எத்தனை பல்கலைக்கழகங்கள் சமவாய்ப்பு பிரிவுகளை அமைக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு பல்கலைகழக மானிய குழு( UGC) சார்பாக ஆஜரான வழக்கறிஞர், சில புதிய விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது பிரச்னைகளின் தீவிரத்தை நீதிமன்றம் உணர்வதாக தெரிவித்த நீதிபதிகள், சாதி பாகுபாடு தொடர்பான தரவுகள் ஒன்றிய அரசு, யுஜிசியிடமிருந்து பெறப்படும் என்று தெரிவித்தனர். மேலும், , சாதி பாகுபாட்டை தடுப்பதற்கான புதிய விதிமுறைகளை UGC வெளியிட வேண்டும் என்றும், அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Also Read: சென்னை மாரத்தான் : பங்கேற்பாளர்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு !