Politics
“திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது” - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் !
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சமீபத்தில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கை என்பது மிகவும் துரிதமாக நடைபெற்றது.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என அனைவரும் திறம்பட செயலாற்றி பெரிய அளவு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டது வரவேற்கத்தக்கது. ஆனால் ஒருவர் வெள்ள பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் இருந்து பொதுமக்களை தனது வீட்டிற்கு வரவழைத்து நிவாரண பொருளை வழங்கி போட்டோ சூட் நடத்தியது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க செல்லாமல் அவர்களை வீட்டுக்கு வரவழைத்து நிவாரணம் வழங்குவதும் இதுதான் முதல் முறை. திமுக கூட்டணியை உடைக்க சிலர் நினைக்கிறார்கள். ஆனால் திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது” என்று கூறினார்.
Also Read
-
விஜய்யின் ஆந்திரா பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை? : தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி!
-
மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? : இரட்டை வேட தவெக அரசுக்கு கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
த.வெ.க.வின் நிர்வாகத் தோல்வியைக் கண்டித்து சென்னையில் தி.மு.க ஆர்ப்பாட்டம்! : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
-
“மதத்தைக் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது !” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!