Politics
கிருஷ்ணகிரி, கோவை, நாமக்கல்... அடுத்தடுத்து கலைப்பு.. நாதக நிர்வாகிகளின் அறிவிப்பால் சீமான் அதிர்ச்சி!
தமிழ்நாட்டில் ஒரு முக்கிய கட்சியாக நாம் தமிழர் கட்சியை ஒரு சிலர் பார்த்தாலும், சீமானால் அது மேலும் பாழாகி வருகிறது. சீமான் தனது நாவை கட்டுப்படுத்தாமல் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், அக்கட்சியின் கொள்கையை மீறியும் செயல்பட்டு வருகிறார். இதுவும் போக வாயை திறந்தாலே பொய் என்று பலரும் விமர்சித்தும் வருகின்றனர். இதற்கு அக்கட்சியினரே பலரும் சீமானுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக அக்கட்சியினருக்கும் சீமான் உரிய மரியாதையை கொடுப்பதில்லை. இப்படி பல விஷயங்களை முன்வைத்து அக்கட்சியினரே குற்றம்சாட்டி வரும் நிலையில், கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நாம் தமிழர் கட்சி கலைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாதக-வும் கலைக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இன்று நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் முன்னாள் மாவட்ட செயலாளர் வினோத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு :
“கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தோம். நாமக்கல் மாவட்டம் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தேன். மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் பொதுக்கூட்டங்கள் அனைத்திற்கும் செலவு செய்து நடந்து வந்தோம். இருப்பினும் எங்களுக்கு உரிய மரியாதையை கிடைக்கவில்லை.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் முரணான பேச்சுகளால், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்களாகிய நாங்கள், 50க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சி இருந்து வெளியேறுகிறோம். நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் பல பேர் விலங்குவார்கள்.
சீமானின் செயல்பாடுகள் கொள்கை ரீதியாக இல்லாமல் இருக்கிறது. சீமானின் செயல்பாடுகள் கொள்கைக்கும், நடைமுறைக்கும் மாற்றாக இருக்கிறது. நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரை தொடர்பு கொள்வது என்பதே தெரியவில்லை. நாங்கள் எந்த கட்சியில் இணைவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் வெற்றியை நோக்கிய பயணமாக இல்லை.
கட்சிக்காகப் பல லட்சங்களைச் செலவு செய்துள்ளோம். ஆனால், நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. கட்சிக் கொள்கைக்கு எதிராகவும், மதவாதத்தை ஆதரித்தும் சீமான் பேசிவருகிறார். இரு வருடங்களாக தலைமைக்கு எங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தோம். ஆனால், நான் எடுப்பதுதான் முடிவு. இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்கிறார் சீமான். அதனால் நாங்கள் வெளியேறுகிறோம். தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால் அடுத்தடுத்து வெளியேறுகின்றனர்” என்றார்.
Also Read
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!