Politics
வயநாட்டுக்கு இடைத்தேர்தல் எப்போது : தேர்தல் ஆணையம் அறிவிப்பு... காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர் யார் ?
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் ராகுல்காந்தி போட்டியிட்டார். இதில் அமேதியில் பின்னடைவை சந்தித்திருந்தாலும், வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி அமோக வெற்றியை பெற்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரண்டு தொகுதிகளிலும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி அபார வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து இதில் எந்த தொகுதியின் எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் என்ற கேள்வி எழுந்த நிலையில், "ராகுல் காந்தி வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்வார். காலியாகும் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.
எனினும் வயநாடு இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்காத நிலையில், தற்போது வயநாடு இடைத்தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் காலியாகவுள்ள 48 சட்டமன்ற தொகுதிகளுக்கும், இரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 23-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!