Politics
“அருவருப்பான அரசியலில் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் இறங்கி உள்ளது!” : செல்வப்பெருந்தகை கண்டனம்!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய்ப் பிரச்சாரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை கண்டிக்கும் வகையில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், தேசிய விழிப்புணர்வு நடைபயணம் சென்னை அண்ணா சாலை ஜிம்கானா கிளப் முகப்பிலுள்ள காமராஜர் சிலையிலிருந்து எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை வரை நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பேரணியில் கலந்து கொண்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,
“ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசாததை எல்லாம் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி, அருவருப்பான அரசியலில் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் இறங்கி உள்ளது.
ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கும் நாட்டின் மத நல்லிணத்திற்கு என்ன சம்பந்தம் உள்ளது. இந்த நாட்டின் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.வுக்கு கிடையாது.
இனியும், இது போன்ற வெறுப்பு அரசியலை, பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் முன்னெடுத்தால், நாடு தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும்” என்றார்.
Also Read: ஈசா யோகா மையத்தில் 2ஆவது நாளாக விசாரணை!
Also Read
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!