Politics
“திராவிட வரலாற்றை அழிக்க சிலர் கடுமையாக முயற்சிக்கிறார்கள்” - அமைச்சர் துரைமுருகன் !
சென்னை ஓட்டேரி பிரிக்கிளின் சாலை சந்திப்பு, வெங்கட்டம்மாள் சமாதி தெரு பகுதியில் சென்னை கிழக்கு மாவட்டம் திரு.வி.க நகர் தெற்கு பகுதி 76 வது வட்ட கழகத்தின் சார்பில் திமுகவின் 75 வது பவள விழா முன்னிட்டு திராவிட தத்துவம்! தீராத லட்சியம் என்கின்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திராவிட தத்துவம் என்பது என்றைக்கும் தீராத ஒன்று. சமூகநீதி சுயமரியாதை என அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யும் பட்சத்தில் இவற்றிற்கு தீர்வு ஏற்படும். ஆனால் இந்த திராவிட தத்துவம் என்பது காலத்திற்கு ஏற்ப பல வடிவங்களாக மாறிக்கொண்டே தான் செல்கிறது.
அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் வரலாறை திருத்தி எழுதுவதற்கு ஒரு கமிட்டி குழு அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி குழுவில் ஒரு சிலரை தவிர்த்து மிச்சம் இருந்த அனைவருமே பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் அவர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் தவறே செய்தாலும் அவற்றைத் தவறு இல்லை என்றும் பிற ஜாதியை சேர்ந்தவர்கள் சரியாக செய்தாலும் அதை தவறு என சித்தரிக்க கூடிய கூட்டமாக இருந்தார்கள். இவர்கள் உள்ளவரை திராவிட கொள்கையும் திராவிட சித்தாந்தமும் என்றென்றைக்கும் தேவைப்படக்கூடிய ஒன்று.
சாதி ரீதியாக பொதுமக்களை துன்புறுத்திய பொழுதும் பறிக்கப்பட்ட போது அதிக அளவில் தனது குரலை மேலோங்கி ஒலிக்கச் செய்தவர் தான் தந்தை பெரியார். ஏனெனில் இவைகள் தான் திராவிடத்தின் தத்துவங்கள் ஆகும். செருப்பு அணியாமலும் இடுப்புக்கு கீழ் துண்டு கட்டியும் இருந்ததை தோலுக்கு மேல் துண்டை அணிய வைப்பதற்காக தந்தை பெரியார் ஆற்றிய தொண்டு மிகவும் சிறப்பான தொண்டு. பேரறிஞர் அண்ணா தான் கொண்ட லட்சியத்தை கனவையும் நிறைவேறுவதை கண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் என பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
சுயமரியாதையும் சமூக நீதியும் சமத்துவம் உள்ளவரை திராவிட இயக்கம் கொள்கையும் தத்துவமும் இருக்கும். தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் பல கட்சிகள் தொடங்கப்பட்டு காணாமல் போய் உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தந்தை பெரியாரின் பெயரையும், பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் அதிகாரப்பூர்வமாக கூறினால் மட்டுமே அவர்களால் நீண்ட காலம் இருக்க முடியும்.
முன்னாள் பிரதமர் நேரு உட்பட பல தொல்பொருள் ஆய்வு அறிஞர்கள் உலகிலேயே மிகவும் பழமையான நாகரீகம் தோன்றியது ஹரப்பா மொகஞ்சாரா என தெரிவிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் தான் திராவிடர்கள். ஆனால் சிலரோ இதற்கு முன்னாடி இருந்த நாகரீகம் சரஸ்வதி நாகரிகம் என்று கூறுகிறார்கள். அதுவும் அவை கண்ணுக்குத் தெரியாது என்று வேறு கூறுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் இந்த வரலாற்றினை அழிக்க முயற்சியை கையில் எடுத்துள்ளார்கள்.
வடமாநிலங்களில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணிக்காக 4000 கோடியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 4 ரூபாய் கூட கொடுக்கவில்லை. நமது கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரும் நமது உரிமை தொகையை கேட்டு பெறுவதற்காக டெல்லிக்கு சென்று உள்ளார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் யாருக்கும் இதுவரையில் அஞ்சியது கிடையாது. அஞ்சாநெஞ்சம் கொண்ட அவரது வழியில் வந்த நமது கழக தளபதியும் அதே போன்றவர் தான். கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த ஒரு முதலமைச்சருக்கும் இல்லாத ஒரு பெருமை நமது தளபதி பெற்றுள்ளார்” என்று கூறினார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!