Politics
நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன ராஜ்நாத்சிங் : உண்மையை வெளிச்சம்போட்டு காட்டிய ராகுல் காந்தி!
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அக்னிபாத் திட்டம் குறித்து சரமாரியாக கேள்விளை எழுப்பினார். அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது எனவும் குற்றம்சாடி இருந்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ”நீண்ட யோசனைகளுக்கு பிறகே அக்னிபாத் திட்டம் கொண்டுவரப்பட்டது. பணியின் போது உயிரிழக்கும் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு கிடைக்கும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரர் அஜய் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள வீடியோ ஒன்றில், ”மரணம் அடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்திலேயே ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் செல்லியுள்ளார். அவரத பொய்யை ராணுவ வீரரின் தந்தையே அம்பலப்படுத்தியுள்ளார். எனவே ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டு மக்களிடமும், ராணுவ வீரரின் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!