Politics
“வெறுப்பை விதைத்தாலும் அன்பையே நீ கொடுத்தாய்...”- ராகுல் காந்திக்கு பிரியங்கா காந்தி உருக்கமான கடிதம்!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன் 4) நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது. இந்த சூழலில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிர்பந்தத்தில் பாஜக உள்ளது.
இதனிடையே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40-க்கு 40 என்று வென்று அசத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு கிடைத்த மக்களின் மிகப்பெரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாடு முழுவதுமே மக்கள் இந்தியா கூட்டணிக்கு தங்கள் அமோக ஆதரவை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அனைவரும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்து வரும் நிலையில், பாஜக மாநிலத்திலேயே பாஜகவுக்கு எதிர்ப்பலைகள் எழுந்துள்ளதை மோடிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இந்த பெரும் எழுச்சிக்கு காரணம் இந்தியா கூட்டணியின் ஒற்றுமை மட்டுமே!
நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்ட இந்தியா கூட்டணியின் பிரசாரமே இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பயணமும், பாரத் ஜோடோ நீதி பயணம் உள்ளிட்டவையும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க உறுதுணையாக இருந்தது.
ஆனால் அப்போது ராகுல் காந்திக்கு பாஜகவினர் தங்கள் எதிர்ப்புகளையே தெரிவித்தனர். அவர்கள் மீது கற்களை எரிந்து, தடை விதித்து, அவரது உருவபொம்மை அவமதிக்கப்பட்டு என பல விஷயங்களை பாஜகவினரும், அதன் ஆதரவாளர்களுக்கும் செய்தனர். எனினும் ராகுல் காந்தி தனது அன்பையே விதைத்தார்.
தொடர்ந்து மக்களுக்கான நல்ல விஷயங்களை செய்துகொண்டே வந்தார். அதன்படி இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு, அனைவரும் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் களம் கண்டனர். உ.பியின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு உள்ளிட்ட தொகுதிகளில் சுமார் 4 லட்சம் வாக்கு வித்தியாசங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி பெருமையாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு வருமாறு :
"அவர்கள் என்ன சொன்னபோதும், நீ தொடர்ந்து நின்று கொண்டிருந்தாய். என்ன நேர்ந்தபோதும் நீ பின்வாங்கவில்லை. உன் உறுதி கேலி பேசப்பட்டபோதும் நீ ஓயவில்லை. உனக்கெதிராக எவ்வளவு பொய்கள் வீசப்பட்டபோதும் நீ துவளவில்லை. கோபத்தையும் வெறுப்பையும் உனக்கு அவர்கள் பரிசளித்தபோதும் நீ ஏற்கவில்லை.
அன்பையும் உண்மையையும் கருணையையும் கொண்டு நீ போராடினாய். உன்னை பார்த்திட முடியாதவர்களுக்குக் கூட இன்று நீ தெளிவாக தெரிகிறாய். ஆனால் எங்களுக்கு உன்னை தெரியும். உன்னை எப்போதும் நாங்கள் பார்த்திருக்கிறோம். உன்னுடைய வீரத்தை நாங்கள் எப்போதுமே அறிந்திருக்கிறோம். உன் தங்கையாக நான் பெருமை கொள்கிறேன்!"
Also Read
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!