Politics
சாப்பாட்டில் கூடவா...?! தமிழர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் பாஜக... கண்டுகொள்ளாத தமிழ்நாடு பாஜக தலைவர்கள்!
ஒன்றிய பாஜக அரசு பாஜக ஆளாத மாநிலங்களில் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும் தமிழ்நாட்டுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் தமிழர்கள் குறித்து அவதூறாகவும் அவமானப்படுத்தும் விதமாகவும் மோடி பேசி வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு வந்தால் புகழ்ந்து தள்ளி வருகிறார்.
இது தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், ஒடிசாவில் பாஜக தேர்தல் பிரசாரத்தின்போது, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளரும் தமிழருமான வி.கே.பாண்டியனை விமர்சிக்கும் நோக்கி, தமிழர்களை திருடர்கள் என்று தொனியில் பேசினார். இவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் கூட, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.
மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர்களும் அதுகுறித்து வாயை திறக்கவே இல்லை. மோடியின் பேச்சுக்கு தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்தபோதிலும், அமித்ஷாவும் தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தார். எனினும் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் வழக்கம்போல் அதனை கண்டுகொள்ளமலே இருந்தனர்.
இந்த சூழலில் தற்போது ஒடிசா பாஜக ட்விட்டர் பக்கத்தில், தமிழர்களையும், அவர்களது உணவு முறை பழக்கங்களையும் அவமானப்படுத்தும் நோக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் தென்னிந்திய கலாசார உடையான வேட்டி - சட்டை அணிந்து நபர் ஒருவர் ஹோட்டலுக்கு செல்கிறார். அங்கே அவருக்கு பழைய சாதம் கொடுக்கப்படுகிறது.
அதனை அவர் பாத்திரத்தில் சாப்பிடாமல் ஹோட்டல் ஊழியரிடம் சண்டையிட்டு, இலையில் போட்டு சாப்பிடுகிறார். அப்போது அந்த சாதம் மற்றும் தண்ணீர் வடிகிறது. மேலும் ஹோட்டல் ஊழியர் சப்பாத்தி எடுத்து வரும்போது தோசை என்று அந்த் அந்த நபர் கேட்பது போன்றவை வீடியோவில் இடம்பெற்றிருந்தது.
மொத்தமாக வி.கே.பாண்டியனை தாக்கி வீடியோ வெளியிடும் நோக்கில் ஒட்டுமொத்த தென்னிந்திய உணவு முறை கலாச்சாரத்தையே பாஜக அவமானப்படுத்தியுள்ளது.
பாஜகவின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், இந்த நிகழ்வுக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் வாயை மூடியே இருக்கின்றனர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு மக்கள் மேலும் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
-
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
-
”தேர்தல் ஆணையமா ஆளுநர் ஆர்.என்.ரவி.. அமைதியாக நடக்கிறதா மேற்கு வங்க தேர்தல்?” : முரசொலி கேள்வி!
-
கோடை வெப்பத்தைத் தணிக்கச் சட்டைப் பையில் வெங்காயம் : ஒன்றிய அமைச்சரின் மூடநம்பிக்கை!