Politics
பாஜக கொண்டுவந்த குற்றவியல் சட்டங்களுக்கு தடை விதிக்கவேண்டும் - உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் !
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக, முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றம் பாரதிய சாக்ஷியா ஆகிய 3 புதிய குற்றவியல் மசோதாக்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. பாஜக அரசு அறிமுகப்படுத்திய இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்களும் நடைபெற்றன.
மேலும், இந்த சட்டத்தில் பாஜக புதிதாக உருவாகியுள்ள விதிகள் மாநில உரிமையை பறிப்பதாகவும், அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இந்த சட்டங்கள் அமலாவதற்கு தடை விதிக்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நலமனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தொடரப்பட்ட மனுவில், நாடாளுமன்ற சட்டங்கள் அனைவருக்கும் புரியும் படியாக ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று அரசியல் சாசன பிரிவு 388 உறுதி செய்துள்ளது. அதனை மீறும் வகையில் இந்த புதிய மூன்று சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. அதே போன்று அனைவரும் பணியாற்ற உரிமை வழங்கும் அரசியல் சாசனம் 19(1)(g) பிரிவுக்கு எதிராக இந்த சட்டங்கள் உள்ளது.
அதோடு இந்த மூன்று சட்டங்களிலும் இந்தி, சமஸ்கிருத வார்த்தைகள் அதிகமாக உள்ளன. இவற்றை இந்தி தெரியாத மாநிலத்தவர் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ன்று விசாரணைக்கு வந்தபோது. சட்டத்தின் பெயர்களை உச்சரிப்பதில் கூட சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்க ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Also Read
-
விவசாயத் தொழிலாளர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கு தமிழ்நாடு அரசின் தீர்மானம் : மு.வீரபாண்டியன் வரவேற்பு!
-
டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“70% முதலீடுகள் - உற்பத்திக்கு தயாராகும் நிறுவனங்கள்” – சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்!
-
🔴LIVE | தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடந்த நிகழ்வுகள் என்னென்ன? : முழு தகவல் இங்கே!
-
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாம் ஸ்டேடியத்தை எப்படி மறைப்பீர்கள் : துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!