Politics
அக்னிபாத் திட்டத்தை விமர்சிக்க கூடாது என்பதா ? - தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் !
ஒன்றிய அரசு ராணுவத்தில் குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் 'அக்னிபாத்' திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றுவார்கள் என்றும், அதில் 25 சதவிகித இளைஞர்கள் மட்டும் தான் கூடுதலாக 15 ஆண்டுகளுக்கு பணியில் தொடர்ந்து வேலை செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 75 சதவிகிதம் இளைஞர்கள் ஓய்வூதியம் இல்லாமல் சம்பளத்துடன் வேலையை விட்டு அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த திட்டத்தை எதிர்த்து பீகாரில் தொடங்கிய போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவி போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இரயில்களுக்கு தீவைத்த தங்கள் எதிர்ப்புகளை காட்டினர்.
மேலும் பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்து பேசிய பா.ஜ.க. தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களை சூரையாடி தீ வைத்ததால் பெரும் வன்முறைகாடாக அப்பகுதிகள் காட்சி அளித்தது. இதில் பல சேதாரங்கள் ஏற்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக பேசிய பா.ஜ.க தலைவர்கள், அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு ராணுவப் பணி முடிந்த பிறகு பா.ஜ.க அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலை கொடுக்கப்படும் என கூறினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய ராணுவம் தொடர்பான நடவடிக்கைகளை, அரசியலாக்க வேண்டாம் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில், ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் ரத்து செய்வோம் என எதிர்க்கட்சிகள் தெரிவிப்பது அவர்களின் உரிமை என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள அவர், "அக்னிவீர் திட்டம் பா.ஜ.க அரசின் கொள்கை வெளிப்பாடு. அந்த திட்டத்தை ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம்என எதிர்க்கட்சிகள் தெரிவிப்பது அவர்களின் உரிமை.
அக்னிவீர் திட்டத்தில் இணைந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றிய இளைஞருக்கு ஓய்வூதியத்தையும் கொடுக்காமல் அப்படியே வெளியே தூக்கி எறியும் இந்த திட்டம் முற்றிலும் தவறானது. அக்னிவீர் திட்டம் இந்திய ராணுவத்துக்கே எதிரானது. எனவே, இதை விமர்சிக்கக் கூடாது, அரசியலாக்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் கூறுவது மிகவும் தவறு. இந்திய நாட்டின் குடிமகனாக, தேர்தல் ஆணையம் தவறு செய்கிறது எனக் கூறுவது, எனது உரிமை" என்று கூறியுள்ளார்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!