Politics
"பிரதமர் பதவிக்கு தான் தகுதியற்றவர் என்பதை மோடி உணர்ந்துள்ளார்" - பிரியங்கா காந்தி விமர்சனம் !
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சென்று இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் அவரின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் [பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் ரேபரேலி மக்களவை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி, இந்து-முஸ்லிம் என பேசி அரசியல் செய்வதில் பிரதமர் மோடி முழுமையாக ஈடுபட்டு பின்னர் பின்வாங்குவதாக சாடினார். அவ்விவகாரத்தில் மோடி நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என பேசுகிறார் என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் திறமையற்றவர் என்பதை பிரதமர் மோடி உணராமல் இருக்கலாம் அல்லது பிரதமர் பத- வியை வகிக்க தகுதி இல்லை என்பதை அவரே உணர்ந்திருக்கலாம் என கருத்து தெரிவித்தார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு சில கோடீஸ்வரர்களுக்காக மட்டுமே சேவை செய்ததாகவும் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை 4000 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று மக்கள் பிரச்சினைகளை ராகுல் அறிந்து கொண்டார். அதனுடன் ஒப்பிடுகையில், பிரதமர் யாரையும் சந்திப்பதில்லை என குற்றம் சாட்டினார்.மேலும், மதத்தின் பெயரால் வாக்குகளைப் பெறாமல், மக்கள் பணிகளை வைத்து வாக்குகளை கேட்கும் அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!