Politics
உ.பி-யில் பாஜக வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி : வீடியோ எடுத்தவர்களை மிரட்டிய பாஜகவினர் !
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒரே அணியாக தேர்தலை சந்திக்கின்றன. இதனால் பாஜக கடும் அச்சத்தில் உள்ளது. மேலும் விவசாயிகள் போராட்டம், ராஜ்புத் சமூகத்தினின் போராட்டம் என இந்த தேர்தல் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த போராட்டங்களின் காரணமாக பஞ்சாப், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிரச்சாரத்துக்கே செல்லமுடியாத நிலை உள்ளது. அவ்வாறு சென்றாலும் அங்குள்ள பொதுமக்கள் பாஜக வேட்பாளர்களை துரத்தி வருவதும் தொடர்கதையாகியுள்ளது.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது அரசியல் களத்தில் விவாதமாகியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் சலேம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ரவீந்திர குஷ்வாகா மீண்டும் போட்டியிடுகிறார்.
அவர் தனது தொகுதியில் பிரச்சாரத்துக்கு சென்றபோது தொகுதியில் எந்த பணிகளும் செய்யவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் அங்குள்ள சாலைகளில் உள்ள குழிகளை காட்டி புகார்களை தெரிவித்தனர். அப்போது அதனை வீடியோ எடுத்தவர்களை பாஜகவினர் மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !