Politics
இஸ்லாமியர்களின் வாக்காளர் அட்டையை சோதனை செய்த பாஜக வேட்பாளர் : குவியும் கண்டனம் !
தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஹைதராபாத் தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா என்பவர் மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை செய்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி கண்டங்களை எழுப்பியது.
பாஜக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து அந்த வீடியோவால் யாரின் மனமாவது புண்பட்டு இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் அனைவரையும் மதிக்கிறேன் என்று பாஜக வேட்பாளர் மாதவி கூறினார்.
இந்த நிலையில் , தற்போது பாஜக வேட்பாளர் மாதவி லதா இஸ்லாமியர்களின் அடையாள அட்டையை சோதனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க ஏராளமான பொதுமக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.
அப்படி வாக்குச்சாவடிக்கு வந்த இஸ்லாமியர்களிடம் ஹைதராபாத் தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா அடையாள அட்டையை கேட்டு அதனை சோதனை செய்துள்ளார். இது குறித்து வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அவரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!