Politics

”நாடாளுமன்ற தேர்தலில் மோடி நினைப்பது நடக்காது” : புதிய புள்ளிவிவரம் சொல்லும் பரகலா பிரபாகர்!

பொருளாதார நிபுணரும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் தொடர்ந்து பா.ஜ.கவையும், மோடி அரசையும் விமர்சித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல் உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என்று விமர்சித்திருந்தார்.

அதேபோல் மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடு முழுவதும் மணிப்பூராக மாறும் என்று சில நாட்களுக்கு முன்பு கூறியுள்ளார். தற்போது மீண்டும் மோடி அரசை விமர்சித்துள்ளார்.

The Wireக்கு பேட்டி அளித்துள்ள பரகலா பிரபாகர், "குஜராத், மத்தியப்பிரதேசம், பிகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டும் பாஜக 50-லிருந்து 60 இடங்கள் வரை இழக்கும். தென்னிந்தியாவில் ஆந்திராவில் மட்டும்தான் ஒன்றிரண்டு சீட்டுகளில் பாஜக வெற்றி பெற முடியும். கர்நாடகா, தெலங்கானா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஒன்றும் ஜெயிக்க முடியாது.

வட இந்தியாவில் 60 இடங்களும் தென்னிந்தியாவில் 13 இடங்களும் என வெற்றி பெற்ற இடங்களிலிருந்து 73 இடங்கள் வரை இந்த தேர்தலில் பாஜக இழக்கும். எனவே பாஜகவுக்கு தற்போதைய நிலையில் இருக்கும் தோல்வி நிலையை bandwagon effect-டன் இணைத்தால், மொத்தமாக ஏதும் இல்லாமல் போகும் வாய்ப்பு கூட இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read: “மோடியின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து இந்தியா மீட்கப்படும்” - காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை !