Politics
நாடாளுமன்றத் தேர்தலின் VVPAT-ல் பதிவான வாக்குகள் 4 மாதத்தில் அழிப்பு : விதிகளை மீறிய தேர்தல் ஆணையம் !
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களை தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம் நடத்துகிறது. தேர்தல்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிய பல்வேறு வழிமுறைகளை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள வகை செய்யும் வகையில் விவிபேட் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் யார் யாருக்கு வாக்களித்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
வாக்குப்பதிவு இயந்திரங்கலில் வாக்காளர்கள் செலுத்தும் வாக்குகள் சரியான சின்னத்திற்கு செல்கிறதா என்பதை உறுதிப்படுத்த கொண்டுவரப்பட்ட இயந்திரமான விவிபேட் இயந்திரத்தில் அச்சாகும் வாக்கு சீட்டுகளை ஓராண்டு வரை பாதுகாக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை.
ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான விவிபேட் வாக்குச்சீட்டுகளை நான்கே மாதத்தில் தேர்தல் ஆணையம் அழித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடித எழுதியதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறையை மீறி நான்கே மாதத்தில் இதனை அழிப்பதற்காக உத்தரவிட்டது ஏன் என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது.குவின்ட் இணையதளத்துக்கு கிடைத்த rti தகவல் மூலம் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதோடு கடும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!
-
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... Fastag இல்லையென்றால் இருமடங்கு கட்டணம்.. வருகிறது புதிய நடைமுறை!
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!