Politics
ஜம்மு - காஷ்மீர் மக்களிடம் மீதமிருந்த உரிமைகளும் பறிபோகும் சூழல் : இது தான் மோடி கூறும் புதுப்பொலிவா?
ஜம்மு - காஷ்மீர் பகுதி என்பது இந்தியா, பாகிஸ்தான், சீனா என மூன்று நாடுகளின் எல்லைப்பகிர்வில் அமைந்துள்ள பகுதியாகும். இதனால், மூன்று நாடுகளும் இந்நிலப்பகுதி தங்களுக்கு தான் உரியது என பல ஆண்டுகாலமாக சண்டையிட்டு வருகின்றனர்.
எனினும், இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உருப்பெற்ற காலத்தில், ஜம்மு - காஷ்மீர் மக்களிடையே, அவர்களின் சுதந்திரம் காக்கப்படும், உரிமை காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, சட்டப்பிரிவு 370-ஐ இயற்றியது அப்போதைய இந்திய அரசு.
இதன் வழி, ஜம்மு - காஷ்மீர் நிலப்பரப்பில் மற்ற மாநிலத்தவரோ அல்லது நாட்டினரோ நிலம் வாங்க இயலாது. அந்நிலப்பரப்பை ஆள அம்மக்களுக்கு மட்டுமே உரிமை உண்டு உள்ளிட்ட வரையறைகள் வகுக்கப்பட்டன.
ஆனால், 2014 இல் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க, ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு தகுதி தரும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்கு பல்வேறு வேலைகளை செய்து வந்தது. அதனையடுத்து, 2019 மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்ற பா.ஜ.க வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது. அதோடு மட்டுமல்லாமல், மாநில ஆட்சியை கலைத்து, மாநில தகுதியையும் நீக்கியது.
ஒரு மாநிலமாக இருந்த ஜம்மு - காஷ்மீர், இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. குடியரசு தலைவர் ஆட்சி உண்டாக்கப்பட்டு, குடியரசு நாட்டின் அடிப்படை உரிமையான வாக்குரிமை என்ற எண்ணத்தையே மறக்கடிக்கும் சூழல் உருவானது. இந்நிலையில், ஜம்முவில் ரூ. 37,000 கோடியில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட சென்ற பிரதமர் மோடி, ஆற்றிய உரையில் பல்வேறு சர்ச்சை கருத்துகள் உள்ளடங்கியுள்ளன.
“ஜம்மு - காஷ்மீர் புதுப் பொலிவு பெற்றுள்ளது. ஐக்கிய அமீரகத்தின் நாடுகள் முதலீடுகள் செய்ய ஆவலுடன் உள்ளனர்” என்று பெருமைப்பட தெரிவித்தார்.
தொடக்க காலத்தில் மக்களின் உரிமை காக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட, சில மாதங்களில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமும், அதானியின் குழுமமும் ஜம்முவில் நிலம் வாங்கியது. தற்போது அவர்களின் நிலம் அண்டை நாடுகளுக்கும் இரையாக்கப்பட உள்ளது.
நில உரிமையை அடுத்து, மொழி உரிமையையும் பறிக்கும் விதமாக, கல்வி முறையிலும் மாற்றங்களை கொண்டு வர திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது பா.ஜ.க அரசு. இதற்கு எதிராக ஜம்மு - காஷ்மீர் மக்கள் உரிமை குரல் எழுப்பும் வேளையில், அப்பகுதிகளில் இணையம் துண்டிக்கப்பட்டு, மின்சாரம் வெட்டப்பட்டு, இருள் சூழப்படுகிறது.
இத்தகைய அடக்குமுறைகள் தான், மோடி கூறும் ‘புதுப்பொலிவா?’ என்று பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்