Politics
மீண்டும் விவசாயிகள் போராட்டம்: டெல்லியை முற்றுகையிட கிளம்பிய விவசாயிகள்... சாலையில் ஆணி அடித்த பாஜக அரசு!
ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய திட்டமிட்டுள்ளனர், இந்த சூழலில் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், போலீசார் சாலைகளில் ஆணி அடித்து தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஹரியானா, உத்திரபிரதேச விவசாயிகள் அரியானா வழியாக டெல்லிக்குள் நுழையாமலும் தடுக்க அந்த பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லிக்குள் நுழையலால் என்பதால் டெல்லியில் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் மார்ச் 11ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று டெல்லி துணை கமிஷனர் ஜாய் திற்கே அறிவித்துள்ளார்
போராட்டம் நடத்தக் கூடிய விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருப்பதாக டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து டெல்லி எல்லைகளில் மத்திய படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை தடுக்க ஹரியானா பாஜக அரசு இணையவசதிகளை முடக்கியுள்ளது.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!