உலகம்

பாகிஸ்தானில் அதிக இடங்களில் வென்ற இம்ரான் கான் ஆதரவு சுயேச்சைகள் : ஒன்றிணைந்த முக்கிய கட்சிகள் !

பாகிஸ்தானில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளன.

பாகிஸ்தானில் அதிக இடங்களில் வென்ற இம்ரான் கான் ஆதரவு சுயேச்சைகள் : ஒன்றிணைந்த முக்கிய கட்சிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த 2922-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. அந்த கூட்டணி சார்பில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவரின் அரசுக்கு பெரிய கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்தது

இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இது குறித்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று கூறிய நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.இந்த தண்டனை காரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத சூழல் ஏற்பட்டது. மேலும், அவரின் கட்சியும் தேர்தலில் நிற்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவரின் தெஹ்ரீக்-இன்சாப் (PTI) கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.

பாகிஸ்தானில் அதிக இடங்களில் வென்ற இம்ரான் கான் ஆதரவு சுயேச்சைகள் : ஒன்றிணைந்த முக்கிய கட்சிகள் !

பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அங்கு கடந்த 8-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.அதில் பதிவான வாக்குகள் அடுத்த நாளே எண்ணப்பட்ட நிலையில், தற்போதுவரை முழு முடிவுகளும் வெளிவரவில்லை. அங்குள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளில் 266 தொகுதிகளுக்கான உறுப்பினர்கள் நேரிடையாக மக்களால் தேர்வு செய்யப்படுவர்.

இதில் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்களுக்கு 102 தொகுதிகள் கிடைத்த நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 73 தொகுதிகளும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதனால் அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளன. ஆனால், இரு கட்சிகள் இணைந்தும் பெரும்பான்மை கிடைக்காததால் இம்ரான் ஆதரவு சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனிடையே தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூடி இம்ரான் கானின் தெஹ்ரீக்-இன்சாப் (PTI) கட்சி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories