Politics

ம.பி தேர்தலில் MLA-களுக்கு மறுக்கப்பட்ட சீட்: ஆத்திரத்தில் அமைச்சரின் பாதுகாவலரை தாக்கிய பாஜக தொண்டர்கள்!

மத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சியை பிடித்தது.

ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி அலைவே தொடர்ந்து எழுந்து வருகிறது.

அங்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், Times Now மற்றும் Navbharat Samachar, ஸ்மால் பாக்ஸ், Poll Tracker ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது.

இதன் காரணமாக பெரும் அச்சத்தில் உள்ள பாஜக அங்கு மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பணக்காரர்கள் மற்றும், எம்.பி-களுக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. இதுவரை நன்கு கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், நேற்று 5-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.

இதில், தற்போது 9 எம்.எல்.ஏகளுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சிலர் மாநில பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பூபேந்திர யாதவை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர். அப்போது சிலர் அவருக்கு நெருக்கமாக அவரை தாக்கும் விதிமாக சென்றதால் அமைச்சரின் பாதுகாவலர் அவர்களை தடுக்க முயன்றுள்ளார்.

அப்போது, அந்த பாதுகாப்பு அதிகாரியை அங்கிருந்த பாஜக தொண்டர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலிஸார் விரைந்து வந்து அமைச்சரின் பாதுகாவலரை மீட்டனர். இதனிடையே இது குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: குஜராத் : பாரம்பரிய நடனத்தின்போது மாரடைப்பு: அடுத்தடுத்து 10 பேர் பலி- நவராத்திரி கொண்டாட்டத்தில் சோகம் !