Politics
ம.பி-யில் ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்.. ஆருடம் கூறும் கருத்துக் கணிப்புகள்.. அதிர்ச்சியில் பாஜக !
மத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சியை பிடித்தது.
ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி அலைவே தொடர்ந்து எழுந்து வருகிறது.
அங்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், Times Now மற்றும் Navbharat Samachar ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது குஜராத் டெல்லி, இமாச்சல் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகளை சரியாக கணித்த ஸ்மால் பாக்ஸ் இந்தியா நிறுவனம் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறியுள்ளது.
இது குறித்துப் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், மத்திய பிரதேசத்தில் உள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 118 முதல் 128 பிடித்து ஆட்சியை கைப்பற்றும் எனவும், பாஜகவுக்கு 02 முதல் 110 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதில், காங்கிரஸ் கட்சிக்கு , 43.80% வாக்குகள் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு 42.80% வாக்குகள் கிடைக்கும் என்றும், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதாக இந்த இடைவெளி அதிகரித்தும் என்றும் கூறியுள்ளார். இந்த அறிக்கை காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியிலும், பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியிலும் உள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!