Politics
அமித்ஷாவுக்கு இந்தி மட்டுமே தெரியும் என்பதால்தானே இந்தியை திணிக்கிறார் - நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் !
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
எப்படியாவது இந்தியைத் திணித்து விட வேண்டும் என பா.ஜ.க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. பா.ஜ.கவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்தாலும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக இந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் மீண்டும் இந்தியை திணிக்கப்பார்கிறது.
அந்த வகையில் நேற்று ஹிந்தி திவாஸ் நிகழ்வை முன்னிட்டு, "நாட்டின் பல மொழிகளை இந்தி ஒன்றிணைக்கிறது. பிராந்திய மொழிகளுக்கு அதிகாரம் அளிக்கவும், மேம்படுத்தவும் இந்தி ஒரு ஊடகமாக இருக்கிறது" என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்தார்.அவரின் இந்த கருத்து விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தனர்.
இந்த நிலையில், பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த விவகாரம் குறித்து அமித்ஷாவை கிண்டல் செய்துள்ளார். இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ் "உங்களுக்கு இந்தி தெரியும் என்பதால் நீங்கள் இந்தி பேசுகிறீர்கள். எங்களை இந்தி பேசும் படி சொல்கிறீர்கள். ஏனெனில், உங்களுக்கு இந்தி மட்டும்தான் தெரியும்" என விமர்சித்துள்ளார்.
Also Read
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!