தமிழ்நாடு

"இனி யாரையும் எதிர்பார்க்க வேண்டாம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுகு நன்றி தெரிவித்த தமிழ்நாட்டு பெண்கள் !

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

"இனி யாரையும் எதிர்பார்க்க வேண்டாம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுகு நன்றி தெரிவித்த தமிழ்நாட்டு பெண்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடு அளித்தது முதல், தற்போது கட்டணமில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் இவ்வரசு செயல்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் - பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

"இனி யாரையும் எதிர்பார்க்க வேண்டாம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுகு நன்றி தெரிவித்த தமிழ்நாட்டு பெண்கள் !

அதனைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று (15.9.2023) காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்தார். இத்திட்ட தொடக்கத்தில் அடையாளமாக 13 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்துக்கான தொடக்கவிழா மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கலந்துகொண்ட பெண்கள் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய திமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் .

அந்த வகையில் இந்த திட்டத்தால் பலனடைந்து பெண் ஒருவர் கூறும்போது, "நான் தினமும் வேளைக்கு சென்றால்தான் எனக்கு அங்கு வருமானம் உண்டு. அதையும் சேர்த்து வைத்தால்தான் தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். ஆனால், இப்போது இந்த திட்டத்தால் வரும் தொகையை வைத்து பல செலவுகளை என்னால் மேற்கொள்ளமுடியும். இந்த திட்டத்தை கொண்டுவந்த ஸ்டாலின் ஐயாவுக்கு மிக்க நன்றி" என்று கூறியுள்ளார்.

"இனி யாரையும் எதிர்பார்க்க வேண்டாம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுகு நன்றி தெரிவித்த தமிழ்நாட்டு பெண்கள் !

மேலும் மற்றொரு பெண் கூறும்போது, " நான் கூலி வேலை செய்கிறேன். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக்கொடுக்க முடியும். திமுக அரசு இப்படி எல்லாம் செய்யும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஆனால், தேர்தலில் அறிவித்தபடி முதலமைச்சர் ஐயா ரூ.1000 கொடுத்தது மகிழ்ச்சியடைய வைக்கிறது" என்று கூறியுள்ளார்.

அதே போல இந்த திட்டத்தால் பலனடைந்து ஒருவர், " தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த திட்டம், அவசர காலத்தில் அது பயன்படும் குடும்பச் செலவுகளை கவனிக்கவும், மருத்துவம் போன்ற தொடர்பான திடீர் செலவுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்தபோது கிடைக்குமா என தெரியாது. ஆனால், இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories