Politics
ஜி-20 மாநாட்டில் எதிரொலித்த உக்ரைன்-ரஷ்யா போர்.. எதிரெதிர் கருத்துக்களை தெரிவித்த பிரான்ஸ், ரஷ்யா !
ஆண்டுதோரும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு, கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பு மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதே நேரம் ரஷ்யா அதிபர் புதின், சீனா அதிபர் ஜி ஜின் பிங் ஆகியோர் கலந்துகொள்ளாமல் தங்கள் பிரநிதிகளை அனுப்பி வைத்தனர்.
இரண்டு நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் அனைவரின் ஒப்புதலோடு கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், உக்ரைன் -ரஷ்யா போர் குறித்த கருத்துக்களும் இடம்பிடித்திருந்தன. எனினும் அந்த கூட்டறிக்கையில் ரஷ்யாவை கண்டித்து நேரடியான கருத்துக்கள் ஏதும் இடம்பெறவில்லை என ஐரோப்பிய ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், " இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் ஒருமனதாக வெளியிட்ட கூட்டறிக்கையில், ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. மாநாட்டில் கலந்துகொண்ட பெரும்பாலான நாடுகள் ரஷ்ய படையெடுப்பைக் கண்டித்துள்ளன" என்று கூறியுள்ளார்.
அதே நேரம் இந்த மாநாத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு பதிலாக கலந்துகொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், "ஜி-20 மாநாட்டில் உக்ரைன் போர் குறித்த நிகழ்ச்சி நிரல் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதன் மூலம் ஜி-20 மாநாட்டை அரசியல் மயமாக்க முயன்ற மேற்கத்திய நாடுகளின் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்