Politics

முன்னோர்கள் கட்டிய கோவில் கருவறையில் நுழைய முயன்ற ராணி.. அர்ச்சகர்களால் வெளியே தள்ளிவிடப்பட்ட அதிர்ச்சி !

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்துக்கு எதிராக பேசியிருப்பார். ஆனால் இதனை பாஜக கும்பல் திரித்து பொய் செய்தி பரப்பி வந்தது. இதையடுத்து பொய் செய்தி பரப்பி வந்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்தது.

இந்த நிலையில், சனாதனத்துக்கு உதாரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் ஜுகல் கிஷோர் கோயில் அமைந்துள்ளது.கடந்த 1778ம் ஆண்டு இந்த கோவிலை அந்த பகுதியை ஆண்ட பன்னா வம்சத்து அரசரான ராஜா ஹிந்துபத் சிங் என்பவர் கட்டினார்.

அப்போதில் இருந்து பன்னா ராஜவம்சத்தை சேர்ந்தவர்களில் யாருக்கேனும் பிறந்தநாள் வந்தால் அந்நாளில் இக்கோயிலில் அவர்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் பன்னா வம்சத்தை சேர்ந்த தற்போதைய மகாராணியான ஜிதேஸ்வரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது கோவில் கருவறையில் இருந்த சிலைக்கு ஆரத்தி எடுக்க வேண்டும் என மகாராணி கோவில் கருவறைக்குள் நுழைந்துள்ளார். அப்போது அங்கிருந்த அர்ச்சகர்கள் அவரை தடுத்ததோடு ஒரு அர்ச்சகர் மகாராணியின் காலை பிடித்துக்கொள்ள, மற்றொரு அர்ச்சகர் மகாராணியின் கையை பிடித்து கருவறையில் இருந்து அவரை வெளியே இழுத்துள்ளார்.

இதில் நிலைதடுமாறி மகாராணி, கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கோவில் அர்ச்சகர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாராணி ஜிதேஸ்வரி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தங்கள் வம்சத்தை சேர்ந்தவர்கள் கட்டிக்கொடுத்த கோவிலின் கருவறைக்குள் நுழைய முயன்ற மகாராணி அர்ச்சகர்களால் வெளியே தள்ளப்பட்டது சனாதனத்ததின் கோரமுகத்தை வெளியிடுவதாக அமைந்துள்ளது.

Also Read: உ.பி : கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரம்.. தோழியை நண்பர்களுடன் சேர்ந்து வன்கொடுமை செய்த நபர் !