இந்தியா

உ.பி : கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரம்.. தோழியை நண்பர்களுடன் சேர்ந்து வன்கொடுமை செய்த நபர் !

கொடுத்த கடனை திரும்ப கேட்ட இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி : கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரம்.. தோழியை நண்பர்களுடன் சேர்ந்து வன்கொடுமை செய்த நபர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்திலுள்ள பிரேம் நகர் என்ற இடத்தைச் சேர்ந்த பட்டியலின இளம்பெண் ஒருவர் ஷிபாத் என்பவரிடம் நட்பாக பழகிவந்துள்ளார். இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்னர் ஷிபாத் பணத்தேவை இருப்பதால் அந்த இளம்பெண்ணிடம் ரூ.30,000 கடன் வாங்கியுள்ளார்.

ஆனால், நீண்ட நாட்கள் ஆகியும் கடனை திரும்ப கொடுக்காததால் அந்த இளம்பெண் தொடர்ந்து கடனை திரும்ப கொடுக்குமாரு ஷிபாத்திடம் கேட்டுவந்துள்ளார். இந்த நிலையில், பணத்தை திரும்ப கொடுப்பதாக சொல்லி, ஹோட்டல் ஒன்றுக்கு வருமாறு அந்த இளம்பெண்ணை ஷாபாத் அழைத்துள்ளார்.

அதன்படி அவர் சொன்ன ஹோட்டலுக்கு அந்த இளம்பெண் சென்றதும், அங்கு ஷிபாத்தின் நண்பர்களான இரண்டு பேர் அங்கு இருந்துள்ளனர். பின்னர் ஹோட்டல் அறையில் பணம் இருப்பதாக கூறி அங்கு வரக்கூறியுள்ளனர். பின்னர் அங்கு சென்றதும் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் அந்த இளம்பெண்ணுக்கு குடிக்கக் கொடுத்துள்ளனர்.

உ.பி : கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரம்.. தோழியை நண்பர்களுடன் சேர்ந்து வன்கொடுமை செய்த நபர் !

அதை குடித்ததும் அந்த இளம்பெண் மயக்கமடைந்துள்ளார். பின்னர் தனது நண்பர்களோடு அந்த இளம்பெண்ணை ஷிபாத் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு அதனை விடியோவாகவும் பதிவுசெய்துகொண்ட அவர் அந்த இளம்பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார்.

ஆனால், அந்த பெண்ணால் அவ்வளவு தொகையை கொடுக்கமுடியாத நிலையில், அந்த வீடியோவை அந்த இளம்பெண்ணை திருமணம் செய்யவிருந்த நபருக்கு ஷாபாத் அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஷிபாத் மற்றும் அவரின் நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories