Politics

"நாங்கள் இந்திய மக்கள் " -அமித்ஷாவை கண்டித்து பெண்களின் மாபெரும் போராட்டம்.. மணிப்பூரில் பரபரப்பு !

மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்தனர்.மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போது அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உறையவைத்தது. மேலும் இதுபோன்ற பல்வேறு கொடுமையான சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணம் உள்ளன.

இதனிடையே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உரையாற்றிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, மியான்மர் நாட்டிலிருந்த ஊடுறுவிய மக்கள்தான் இந்த வன்முறைக்கு காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு நாடாளுமன்றத்தில் இருந்த மிசோ தேசிய முன்னணியின் ராஜ்யசபா எம்.பி வன்லால்வேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து, நங்கள் சுதந்திரத்திற்கு முன்னரே நூற்றாண்டு காலமாக மிசோரமில் வசித்து வருகிறோம் எனக் கூறியிருந்தார்.

அதோடு அமித்ஷாவின் இந்த கருத்துக்கு வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த பலரும் விமர்சித்திருந்தனர். மேலும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சுமார் 10,000 பெண்கள் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது பாஜகவை கண்டித்தும், நாங்கள் சட்டவிரோத ஊடுறுவல்காரர்கள் அல்ல, இந்திய குடிமக்கள் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Also Read: ”நீங்க கொடி ஏத்துறத பாக்கனும்”.. கடிதம் எழுதிய 3ம் வகுப்பு மாணவன்: ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர்!